திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6ஆம் நாள் திருவிழாவான வருகிற 8ஆம் தேதி திருக்கல்யாணமும், 7ஆம் நாள் திருவிழாவாக 9ஆம் தேதி வைகாசி விசாகத் தேரோட்டமும் நடைபெறவுள்ளது. பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா வருகிற 12ஆம் தேதி கொடியிறக்கத்துடன் நிறைவடைகிறது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.