பழனி தெரசம்மா காலனியைச் சேர்ந்த சின்னதம்பி (எ) தோமையார், நெப்போலியன் கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த நிலையில், நேற்று இரவு கோதைமங்கலம் மதுபானக்கூடம் அருகே படுகொலை செய்யப்பட்டார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆரோக்கிய ரோஸி, சூர்யா ஆபிரகாம், விஜய் ஆதித்யா, முத்து, சிவசங்கர் ஆகிய 5 பேர் பழனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.