பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா முன்னிட்டு தேரோட்டம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய துணை கோயிலான அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இம்மாதம் ஆறாம் தேதி திருவிழா தொடங்கியது. பிப்ரவரி 17ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்வுகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்புடைய செய்தி