பழனி: மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட்.. கேரள இளைஞர்கள் கைது

பழனியில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாா், சிவகிரிப்பட்டி பழனியாண்டவா் கலைக் கல்லூரி அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த மூன்று இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா்கள் கேரள மாநிலத்தைச் சோ்ந்த சிவாஜிமோகன் (28), முகமது நசீபில் (27), பாரத்கிருஷ்ணன் (25) என்பதும், கஞ்சாவை சாக்லேட் வடிவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி