பழனி: இடும்பன் குளம் நீர் வரத்து அதிகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிப்பட்டி அருகே உள்ள இடும்பன் குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. வரதமாநதி அணையில் வெளியேற்றப்படும் உபரி நீர் இக்குளத்தின் நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்நிலையில், அணையிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குளத்திற்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்ளளவு உயர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி