பழனி: வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் (வீடியோ)

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெரியநாயகி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகத்திற்குப் பிறகு வேத மந்திரங்கள் முழங்க கொடிமரம் ஏற்றப்பட்டது. இந்த 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி சுவாமி பல்வேறு வாகனங்களில் கிரி வீதிகளில் உலா வருகிறார். வரும் 29-ல் திருக்கல்யாணமும், 30-ல் தேரோட்டமும் நடைபெற்று, ஜூன் 2-ல் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

தொடர்புடைய செய்தி