மேலும் சேம்பரில் வரும் வருமானத்திற்கு குறைவாக கணக்கு காட்டுவதாக புகார் வந்துள்ளதாக கூறி பணம் பறிக்க முயன்றுள்ளார். சந்திரசேகரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த சூளை மேலாளர் சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்திரசேகரிடம் அடையாள அட்டையை பெற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது சந்திரசேகர் வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து பணம் பறிக்கும் முயற்சி செய்ததாக தெரியவந்துள்ளது. சந்திரசேகரை கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.