திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ. தி. மு. க. ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மாவட்டச் செயலாளர் வி. பி. பி. பரமசிவத்திற்கு பழனியில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அப்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் காகிதக் குப்பைகளில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் கட்சியினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.