பழனி: கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது

பழனி அடிவாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரன் தலைமையிலான போலீசார் குரும்பப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். சந்தேகத்துக்கிடமாக நின்ற 4 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (வயது 19), ஆயக்குடியைச் சேர்ந்த தினேஷ்குமார் (19), விக்னேஷ் (21) மற்றும் 17 வயதுடைய சிறுவன் என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி