பழனி: வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஜவகர்நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். அவருடைய மகன் சுரேஷ் (வயது 19). இவர், கடந்த சில நாட்களாக சோகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது சுரேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேபோல் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (45). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்த மாரிமுத்து, வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி