பழனி: பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

பழனி அருகேயுள்ள புதுஆயக்குடி சேர்ந்த மளிகைக் கடைக்காரர் ஷேக்பக்ருதீன் பைக்கில் பழனி-திண்டுக்கல் சாலையில் சென்றார். அப்போது இவரது பைக்கும், எதிரே திருமுருகன் (21) என்பவர் ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சேக்பக்ருதீனை அக்கம்பக்கத்தினா மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி