பழனி தொகுதி எம்எல்ஏ ரவி மனோகரன், மாவட்ட ஆட்சியரை சந்தித்து தொகுதி வளர்ச்சி பணிகள் மற்றும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இடும்பன் குளம், வையாபுரி குளம், சண்முக நதி உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்க கோரிக்கைவைத்தார். வையாபுரி குளத்தில் கழிவுநீர் கலப்பால் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தாக எம்எல்ஏ தெரிவித்தார்.