பழனி அருகே மாயமான பெண் தொழிலாளி சடலமாக மீட்பு

பழனி அருகே பசுபதி புத்தூர் பிரிவு பகுதியில், மாயமான பெண் தொழிலாளி வெள்ளத்தாயி (53) முள் புதருக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பழனி அருகே தங்கி வேலை செய்து வந்தார். நேற்று வேலைக்கு சென்ற அவர் இரவு வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடி வந்தனர். இன்று (மே 15) காலை அவரது உடல் மீட்கப்பட்டது. இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என சாமிநாதபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி