பழநி முருகன் கோயிலில் மாசி மகத் திருவிழா

பழனி முருகன் கோயிலில் மாசி மகத் திருவிழாவையொட்டி பாரவேல் மண்டபத்தில் 1008 வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு சங்காபிஷேகம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜையும், அமிர்தலிங்கம் மற்றும் செல்வசுப்ரமணியம் குருக்கள் முன்னிலையில் உச்சிக்கால பூஜையில் சங்கு நீர், கலச நீரால் அபிஷேகமும் நடந்தது. சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையுடன் நடைபெற்ற இந்த விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி