திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி திருவிழா பிப்ரவரி 6 அன்று இரவு 8:40 மணிக்கு முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்குகிறது. 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், பிப்ரவரி 17 அன்று கொடியேற்றம், பிப்ரவரி 24 அன்று திருக்கல்யாணம், பிப்ரவரி 25 அன்று தேரோட்டம் ஆகியவை நடைபெறும். பிப்ரவரி 26 அன்று கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.