தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் "இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை" நிகழ்ச்சி பழனியாண்டவர்கலை-பண்பாட்டு கல்லூரியில் நடைபெற்றது. முதல்வர் ரவிசங்கர் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித்துறை மாநில ஒருங்கிணைப்பாளர் நெல்லை ஜெயந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சி தமிழ் இலக்கியத்தை இளையோர் மத்தியில் வளர்க்கும் நோக்கில் நடத்தப்பட்டது.