திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு ஏப்ரல் மாதம், மே மாதம் கோடை சீசனை முன்னிட்டு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு சென்று இயற்கை சூழ்நிலையை ரசித்து வருகின்றனர். இந்நிலையில் பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லும் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் ஒரு காரின் டாஸ்போர்ட் கேமராவில் பதிவான காட்சி ஒன்றில் சிறுத்தை ஒன்று வாகனத்திற்கு முன்னால் பாய்ந்து ஓடிய காட்சிகள் இணையத்தில் பரவி சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாகவும், கவனமுடன் செல்லுமாறும் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் கொடைக்கானலுக்கு செல்லும் வாகன ஓட்டிகளிடையே தேக்கம் தோட்டம் சோதனை சாவடியில் இதற்கான அறிவுரையும் வழங்கப்படும் எனவும், வனத்துறை மற்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.