பழனி முருகன் கோவிலின் உப கோவிலான லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோவில் நிர்வாகம் சார்பில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அபிஷேக அலங்காரங்களுக்குப் பிறகு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேசன், உதவி ஆணையர் லட்சுமி, கந்தவிலாஸ் அதிபர் என். செல்வகுமார், பிஜேபி நகரத் தலைவர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கும்பாபிஷேக விழா பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.