திண்டுக்கல், கொடைக்கானல் நாயுடுபுரத்தைச் சேர்ந்த ஜெரால்டு மகன் ஆண்டனிஅத்விக் மற்றும் அருண்ராபர்ட் மகள் சார்லி ஆகியோர் காணாமல் போனதாக பெற்றோர்கள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, குழந்தைகள் பழனி செல்லும் பேருந்தில் சென்றதை கண்டறிந்தனர். உடனடியாக பேருந்தை துரத்திச் சென்று நிறுத்தி இரு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் பெற்றோர்களை அழைத்து அறிவுரை வழங்கி குழந்தைகளை ஒப்படைத்தனர்.