கொடைக்கானல் அருகே குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகில் உள்ள தனது பங்களாவில் சூரிய நாராயணன் (73) என்பவர் சுற்றுலாப் பயணிகளாக வந்த 5 பேர்களால் தாக்கி கட்டிப் போடப்பட்டு, மூச்சுத்திணறி உயிரிழந்தார். மேலும், அவரது வீட்டில் இருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், சிசிடிவி கேமரா, ஹார்டு டிஸ்க் ஆகியவையும் திருடப்பட்டன. இந்த கொலை சம்பவத்தில் மோசடி மற்றும் ஹவாலாவில் ஈடுபடுபவர்கள் என கூறப்படும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.