பழனி: போதைக்கு எதிராக 4000 கி.மீ. சைக்கிள் பயணம்

போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கேரள மாநிலம் கண்ணனூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சனிது, ஒரு சக்கர சைக்கிளில் கேரளாவில் இருந்து நேபாளம் வரை 4,000 கி.மீ. பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக பழனிக்கு வந்த அவருக்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு அளித்தனர். ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கிய இந்தப் பயணம் நேபாளத்தை அடைய ஓராண்டு வரை ஆகும் என அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த விழிப்புணர்வு முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி