பழனியில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், திமுக மகளிர் அணி சார்பாக கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. தொடர்ந்து பழனி பேருந்து நிலையம் அருகே பழனி நகர திமுக சார்பாக கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி