திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை நடைபெறுகிறது. நவம்பர் 27 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கும். தினமும் சண்முகார்ச்சனை, தங்கச் சப்பர சேவை, யாகசாலை தீபாராதனை, இரவு தங்கரத புறப்பாடு நடைபெறும். டிசம்பர் 2 அன்று பரணி தீபம், டிசம்பர் 3 அன்று மஹா கார்த்திகை தினத்தில் சிறப்பு பூஜைகள், தங்கமயில் வாகன சேவை, கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் ஆகியவை நடைபெறும்.