பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா

முருகனின் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மலை மீது சென்று சாமி தரிசனம் செய்தனர். மாலையில் சாயரட்சை பூஜைக்குப் பிறகு விநாயகர், சின்னகுமாரருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மலை மீதுள்ள தீபஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பின்னர் பனை ஓலைகளால் உருவாக்கப்பட்ட சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோயில் ஊழியர்கள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி