பழனி மாவட்டமாக அறிவிக்க போராட்டம் அழைப்பிதழ் வழங்கல்

2021-ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதியான "பழனி மாவட்டம் அமைக்கப்படும்" என்ற அறிவிப்பை இதுவரை நிறைவேற்றாததை கண்டித்து, வருகின்ற பிப்ரவரி 10-ம் தேதி பாரதிய ஜனதா கட்சி பழனி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சபரி அவர்களை மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவருமான N. கனகராஜ் தலைமையில் சந்தித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்கள். இந்த சந்திப்பில் மாவட்ட பொருளாளர் ஆனந்த் அவர்களும் கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி