கொடைக்கானலில் இரண்டாவது நாளாக கடும் போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், மலைச்சாலைகளில் 2-வது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. சுற்றுலா வாகனங்கள் ஆமை வேகத்தில் சென்றதால் பயணிகள் பல மணி நேரம் சிக்கித் தவித்தனர். நகரின் பிரதான சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி