பூம்பாறை மயான பகுதியில் குப்பைகுவிப்பு – பொதுமக்கள்அதிருப்தி

திண்டுக்கல் மாவட்டம் பூம்பாறை கிராமத்தின் மயானப் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். துர்நாற்றம் வீசுவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, மயானப் பகுதியில் குவிந்துள்ள குப்பைக் கழிவுகளை உடனடியாக அகற்றி, நிரந்தரத் தீர்வு காண பூம்பாறை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி