திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி திமுக இளைஞரணி சார்பில் பழனி தாராபுரம் சாலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐபி செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிதாக கட்டப்படும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் மூலம் மாணவர்கள் பொதுமக்கள் கல்வியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பயனடைய உள்ளனர். நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் வேலுமணி ஒன்றிய செயலாளர் சௌந்தர பாண்டியன் சாமிநாதன் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.