கொடைக்கானலில் தற்போது சீசன் நிலவி வருவதால், வரவிருக்கும் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் பிரையண்ட் பூங்காவில் மலர்ந்த வண்ணமயமான பூக்களை ரசித்து, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.