பழனி அக்ஷயா ஸ்கூல் பின்புறம் சாமி ஸ்கூல் அருகில் ஒரு மாடு தொட்டியில் விழுந்துள்ளது. தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாட்டின் ஒரு கொம்பு உடைந்து விட்டது. ரத்தம் வருகிறது. விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் வந்து பரிசோதித்தால் நல்லது என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.