பழனி அருகே நூற்பாலையில் தீ விபத்து - ₹2 கோடி சேதம்

பழனி அருகே நாகூர் பகுதியில் உள்ள விநாயகா ஸ்பின் டெக்ஸ் நூற்பாலையில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், இயந்திரங்கள் மற்றும் நூல் பண்டல்கள் எரிந்து சுமார் ₹2 கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டது. ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். புகை மூட்டம் காரணமாக பழனி–மடத்துக்குளம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி