பழனி: இருசக்கரவாகன திருட்டில் ஈடுபட்ட தந்தை-மகன் கைது

பழனி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சக்திவேல் என்பவர் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்றார். 

இதுகுறித்து சக்திவேல் பழனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில்  காவல் நிலைய சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சம்பவத்தில் ஈடுபட்ட தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த தந்தை குருசாமி மற்றும் மகன் ஈஸ்வரன் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

புகார் அளித்த சுமார் ஒரு மணி நேரத்தில் இருசக்கர வாகன திருடர்களை கைது செய்து அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்தி