பழனி கோவிலில் தங்கத் தேர் இழுத்த திமுகவினர்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திமுகவினர் சிறப்பு வழிபாடு நடத்தினர். 2026 சட்டமன்ற தேர்தலில் பழனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட, முன்னாள் ஒன்றிய ஒருங்கிணைந்த செயலாளரும், தற்போதைய மாவட்ட தொழிலாளர் அணி செயலாளருமான மாரியப்பனுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என வேண்டி, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த வழிபாடு மற்றும் வேண்டுதல் மூலம், கட்சியின் எதிர்கால வெற்றிக்கு அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி