சென்னையில் மாற்றுத்திறனாளிகள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினர் அவர்களைக் கைது செய்ததைக் கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பழனி மயில் ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பகத்சிங் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.