கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காரணமாக பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்தனர். வின்ச், ரோப் கார் மற்றும் பொது தரிசன வரிசைகளில் 2-3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்காக குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகளுடன் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.