பழனியில் குவிந்த பக்தர்கள்

கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு, பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். வின்ச், ரோப் கார் மற்றும் பொது தரிசன வரிசைகளில் பக்தர்கள் சுமார் 2 முதல் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செய்யப்பட்டிருந்தன.

தொடர்புடைய செய்தி