பழனியில், தாலுகா அலுவலகம் முன்பு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக பழனி நகர செயலாளர் வேலுமணி, நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, துணைத் தலைவர் கந்தசாமி, நகர துணை செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் சாமிநாதன், ஆயக்குடி பேரூர் செயலாளர் சின்னதுரை, காங்கிரஸ் நகர தலைவர் முத்துவிஜயன், முருகானந்தம், வீரமணி, சாயிராபானு, முகமதுஅலி, மற்றும் கவுன்சிலர்கள், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.