திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகே புல்லட்டில் சென்ற ஜிம் பயிற்சியாளர் நிரேஷ், நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.