பழனி: முருகன் கோயிலுக்கு பேருந்துகளை வழங்கிய தொழிலதிபர்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் வசதிக்காக இலவச பேருந்து வசதிகள் இயக்கப்பட்டு வருகிறது. கிரிவலப் பாதையில் பக்தர்கள் ரோப் கார் நிலையம், வின்ச் நிலையம் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதிகளுக்கு இலவச பேருந்தில் செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணப்பன் என்பவர் புதிய பேருந்தை நன்கொடையாக வழங்கினார். மேலும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சார்பில் ஒரு பேருந்தும் நன்கொடையாக வழங்கப்பட்டது. மலையடிவாரத்தில் பேருந்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்காக இன்று முதல் துவக்கி வைக்கப்பட்டது. 

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேருந்து சேவையை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்குமார் வழங்கிய பிரம்மாண்ட ஒளிதுறை மலையடிவாரத்தில் பாத விநாயகர் கோயில் முன்பு அமைக்கப்பட்டு இன்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் இலவசமாக பேருந்து சேவையை இயக்கி வருவதை அறிந்து, தானும் அந்த சேவையில் பங்கெடுக்கும் வகையில் புதிய பேருந்து வாங்கி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக தொழிலதிபர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி