அப்போது திடீரென கார் சரஸ்வதி மீது பயங்கரமாக மோதி சாலையோர 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசியது. அதன் பின்னர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த சென்டர் மீடியன் மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் வந்தவர்கள் காயங்களின்றி உயிர்த்தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரஸ்வதி உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் சென்டர் மீடியன் மீது ஏறி நின்ற காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்
ஜெயிலுக்குள் கஞ்சா விற்பனை செய்த சிறை காவலர் சஸ்பெண்ட்