திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு பகுதியில் உள்ள பாலம் தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்துள்ளது. இதனால் அப்பகுதி வழியே செல்லும் இருசக்கர வாகன ஒட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, பேரூராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பாலத்தை ஆய்வு செய்து, உடனடியாக கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.