பாலசமுத்திரம் பள்ளி ஆசிரியருக்கு விருது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் முருகானந்தம் அவர்களுக்கு, சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட (NSS) அலுவலருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர் இந்த விருதினை வழங்கி அவரைப் பாராட்டி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டு, விருது பெற்ற ஆசிரியருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி