48 நாள் விரதத்தை நிறைவு செய்யும் விதமாக தற்போது பழநி முருகன் கோவிலில் காவடி சுமந்து சென்று வழிபாடு செய்தார். மேலும், அண்ணா பல்கலை. வழக்கு விவகாரத்தில் ஆட்சியாளர்களை கண்டிக்கும் விதமாக தனக்குத்தானே சாட்டையடி கொடுத்து விரதம் தொடங்கி இருந்தார்.
அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபாடு நடத்துவேன் என்று அண்ணாமலை கூறியிருந்த நிலையில் முதல் படைவீடாக இன்று பழநி திருக்கோவிலுக்கு காவடி சுமந்து சென்றுள்ளார்.