பழனியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக வெற்றி

பழனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ரவிமனோகரன் 66,986 வாக்குகள் பெற்று, 693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பழனி தொகுதியை அதிமுக கைப்பற்றி இருக்கிறது. வாக்கு எண்ணிக்கையின்போது முதல் 2 சுற்றுகளில் அதிமுக முன்னிலை பெற்ற நிலையில், 3-ஆவது சுற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை வகித்தது. 15 சுற்றுகளுக்குப் பிறகு அதிமுக, தவெக இடையே கடும் போட்டி நிலவியது. தவெக வேட்பாளர் எம்.பிரவீன்குமார் இரண்டாம் இடம் பிடித்தார்.

தொடர்புடைய செய்தி