பழனி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்தவும், நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தவும், தினக்கூலியை ரூ. 600 ஆக அதிகரிக்கவும், நிலுவை சம்பளத்தை வழங்கவும் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஒன்றிய தலைவர் என். ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கே. அருள் செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.