பழனி முருகன் கோயிலில் நடிகர் சூர்யா சிறப்பு வழிபாடு

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு திரைப்பட நடிகர் சூர்யா, இயக்குநர் வம்சி வருகை தந்தனர். ரோப்கார் மூலமாக மலைக்கோவிலுக்கு சென்ற அவர் காலை 8 மணிக்கு நடைபெறும் சிறுகால சந்தி பூஜையில் வேடர் அலங்காரத்தில் சுமார் அரை மணி நேரம் அமர்ந்து வழிபட்டார். நடிகர் சூர்யா நடிக்க உள்ள 46வது படத்தின் திரைப்படத்தின் கதையை வைத்து பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் போகர் சமாதியில் வழிபட்டு வெளியே வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள், சாமி படங்கள் வழங்கப்பட்டன. 

ஏராளமான பக்தர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். பின்னர் கோவில் ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் என அனைவரிடம் சேர்ந்து புகைப்படம் எடுத்தனர். பின்னர் ரோப்கார் வழியாக கீழே இறங்கிய அவர் புறப்பட்டுச் சென்றார்.

தொடர்புடைய செய்தி