திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். ரோப்கார் மூலம் கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின் பொகர் சன்னதியில் வழிபாடு செய்தார். மீண்டும் ரோப்கார் வழியே கீழிறங்கினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் அவருடன் கைகுலுக்கி, செல்ஃபி எடுத்தனர். திருஆவினன்குடி கோயிலுக்கு சென்று அங்கேயும் சுவாமி தரிசனம் செய்தார்