திண்டுக்கல்: வனப்பணியாளா் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதியில் தற்காலிக வனப் பணியாளராகப் பணியாற்றி வந்த தினேஷ் (21), மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்றார். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி