இந்நிலையில் கிரிவலப்பாதையில் எந்த விதமான வாகனங்களும் செல்லாதவாறு அடைக்கப்பட்டது. மேலும் இரண்டு மாதங்களாக கை வியாபாரிகளை கிரிவலப் பாதையில் இருந்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து 300 குடும்பங்களும் வருமானமின்றி தவித்து வருகின்றனர். தொடர்ந்து திருக்கோயில் நிர்வாகம் வறுமையில் வாடும் 300 குடும்பங்களின் நலனில் அக்கறை கொண்டு கை வியாபாரிகளை கிரிவலப் பாதையில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமையாக பொதினிவளவன், செந்தில்குமார் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அடிவாரம் கை வியாபாரிகள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு தேவஸ்தான நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கும் வகையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.