இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பரிசளிக்கும் வகையில் இளையராஜாவின் உருவப்படத்தை வித்தியாசமான முறையில் உருவாக்கியுள்ளார்.
இளையராஜாவின் தாயாரான சின்னத்தாய் அம்மாளின் உருவப்படத்தை பயன்படுத்தி இளையராஜாவின் உருவப்படத்தை உருவாக்கியுள்ளார்.
சின்னத் தாய் அம்மாவின் 2000 உருவப் படங்களை பயன்படுத்தி இளையராஜாவின் உருவத்தை உருவாக்கியதாகவும், இளையராஜா அவர்களுக்கு பரிசளிப்பதற்காக இந்த ஓவியம் உருவாக்கப்பட்டதாகவும் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். நான்கு அடி உயரமும், இரண்டு அடி அகலமும் கொண்ட இளையராஜா ஓவியம் அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.